இன்றைய காலகட்டத்தில் இணையதள பயன்பாடானது அதிகரித்த நிலையில் ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துவிட்டது. செல்போனுக்கு ஏதாவது குறுஞ்செய்தி அல்லது லிங்கை அனுப்பி வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் அபேஸ் செய்து விடுகிறார்கள். இது தொடர்பான எச்சரிக்கை அறிவிப்புகளை அவ்வப்போது காவல்துறையினரும் வங்கிகளும் வெளியிட்டு கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் மின் கட்டண பில் செலுத்துங்கள் என்று கூறி புதிய முறையில் மோசடி நடப்பதாக கூறி எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது மின் கட்டண பில் செலுத்துங்கள் என்று நம்முடைய செல்போனுக்கு ஒரு மெசேஜ் வருமாம்.
நாம் அந்த மெசேஜை ஓபன் செய்து பார்த்த பிறகு நம்முடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வரும். அதில் பேசும் நபர் நீங்கள் மின்கட்டணம் செலுத்தவில்லை. இதனால் உங்கள் வீட்டில் மின்தடை செய்யப்பட இருக்கிறது. எனவே நாங்கள் அனுப்பும் லிங்கை கிளிக் செய்து உடனடியாக மின்கட்டணம் செலுத்துங்கள் என்று கூறுவார்கள். இதை நம்பி யாராவது அவர்கள் அனுப்பும் லிங்கை கிளிக் செய்தால் வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் அபேஸ் செய்து விடுவார்கள்.
அதோடு மின்கட்டணம் செலுத்துவதற்காக தனியாக ஒரு செயலியையும் டவுன்லோட் செய்ய சொல்லி நூதன முறையில் கொள்ளையில் ஈபடுகிறார்கள். எனவே இது போன்ற ஏதாவது மோசடி மெசேஜ்கள் உங்களுடைய செல்போனுக்கு வந்தால் உடனடியாக 100 என்ற நம்பருக்கு போன் செய்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் இது தொடர்பான எச்சரிக்கை வீடியோவையும் தற்போது தமிழக டிஜிபி சைலேந்திரபாபு டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மின் இணைப்பு மோசடி சம்பந்தமாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/ படைத்தலைவர் முனைவர் செ. சைலேந்திர பாபு,IPS., அவர்களின் விழிப்புணர்வு காணொளி.https://t.co/GBXd2s4hkH#Beware #EBscam #Electricity #FakeSms #DGPSylendrababuIPS #TNPolice pic.twitter.com/t84iDkO2Zh
— Tamil Nadu Police (@tnpoliceoffl) October 20, 2022