Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சுகாதார சீர்கேடு…! குவிந்து கிடக்கும் குப்பைகள்…! முகம் சுளிக்கும் வியாபாரிகள்…!

சாலைகளில் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதால் குப்பை தொட்டி அமைத்து தர வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காதர் பேட்டை ஆடை விற்பனைக்கு பெயர் பெற்றது.  இவ்விடத்திற்கு தினமும் ஏராளமான வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து ஆடைகளை வாங்கி செல்கின்றனர்.  இவ்விடத்தில் சில்லறை மற்றும் மொத்த ஆடை விற்பனை கடைகள் செயல்படுகிறது.  இக்காரணத்தினால் கடையில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.  ஆனால் மிகவும் பிரபலமான இவ்விடத்தில் குப்பைத்தொட்டி வசதி இல்லை.

எனவே அப்பகுதியில் உள்ள வீதிகளில் அதிகமான குப்பைகள் வந்து குவிகின்றன.  இவை காற்றில் அங்குமிங்கும் பறந்து ஆபத்தை விளைவிக்கின்றன.  மேலும் பல நாட்களாக குவிந்து கிடக்கும் குப்பைகளிலிருந்து இருந்து ஒருவித துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.  இதனால் அங்கு வரும் வியாபாரிகள் மற்றும்  வர்த்தகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.  எனவே அப்பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றி அவ்விடத்தில் குப்பைத்தொட்டி வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |