Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியன்-2: நடிகர் கமலுக்கு எந்த கதாப்பாத்திரம் தெரியுமா?…. நடிகை ரகுல் பிரீத் சிங் வெளியிட்ட சுவாரஸ்யமான தகவல்….!!!!

தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல்பிரீத் சிங். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், NGK,ஸ்பைடர் போன்ற படங்கள் வாயிலாக ரசிகர்களுக்கு அறிமுகமானார். இதையடுத்து சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் அவர் நடித்திருக்கிறார்.

இப்போது கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தில் ரகுல்பிரீத் சிங் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரகுல்பிரீத் சிங் அளித்த பேட்டியில் “இந்தியன் 2ல் 90 வயது முதியவராக நடிகர் கமல் நடித்து வருவதாகவும், இதற்காக அவருக்கு மேக்கப் போட மட்டும் 5 மணிநேரம் ஆகும் எனவும் கூறினார்.

அவர் தங்களுக்கு முன்னாள் வந்து மேக்கப் போட்டுக்கொள்வார். பின் ஷூட்டிங் முடிந்த பிறகு அவருக்கு அந்த மேக்கப்பை கலைக்க 2 மணிநேரம் ஆகும். எனினும் அவர் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சினிமாவில் ஒரு அங்கமாக உள்ளார்” என சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

Categories

Tech |