Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இந்த விலையை கண்டித்து…. காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பாக சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகின்றது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து வேப்பமூடு வரை சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து விஜய் வசந்த் எம்.பி இதில் பங்கேற்று சைக்கிள் ஊர்வலம் சென்றுள்ளார்.

மேலும் காங்கிரஸ் நிர்வாகிகள் பெரும்பாலானோர் சைக்கிளை ஓட்டியுள்ளனர். இந்த சைக்கிள் ஊர்வலம் சுற்றுலா மாளிகை முன்வந்த போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். எனவே சைக்கிள் ஊர்வலத்திற்கு காவல்துறையினர் தரப்பில் அனுமதி வழங்காததால் தடையை மீறி சைக்கிள் பேரணி சென்ற விஜய் வசந்த் எம்பி, மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநகர தலைவர் அலெக்ஸ் மற்றும் 34 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Categories

Tech |