சாலையை சீரமைக்க வலியுறுத்தி பெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காவிரிநகர், பழனிநகர், கேசம்பட்டிநகர் குடியிருப்பு வீதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் ரோட்டில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளித்தது.
இதனால் பாதிப்படைந்த கிராம பெண்கள் சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது சாலையை சீரமைக்க சரியான நடவடிக்கை எடுக்கவில்லா என்றால் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று வருவாய்த்துறை அலுவலர்களிடம் பெண்கள் தெரிவித்தனர்.