Categories
உலக செய்திகள்

இந்த தடுப்பூசி போட்டு கொண்ட இந்தியர்கள்…. ஓமனுக்கு பயணம் செய்யலாம்…. இந்திய தூதரகத்தின் அறிவிப்பு….!!

கோவேக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட இந்தியர்கள் ஓமனுக்கு பயணம் செய்யலாம் என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

ஓமன் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் எந்தெந்த தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்கள் அந்நாட்டிற்கு வரலாம் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது “இந்தியாவில் கோவேக்சின் என்ற தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசியை செலுத்தியவர்கள் ஓமன் நாட்டிற்கு வரும் போது தனிமைப்படுத்துதல் விதிமுறைகளில் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவர்கள் வழக்கம்போல் தங்களது பணிகளை செய்யலாம்.

இதனையடுத்து 2-வது டோஸ் செலுத்திக் கொண்ட 14 நாட்களில் அவர்கள் தங்களது பயணத்தை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி விமான நிறுவனங்களின் வழக்கமான கொரோனா விதிமுறைகளை பயணிகள் பின்பற்ற வேண்டும் என்று” அதில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு ஓமன் நாட்டிற்கு கோவேக்சின் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தி கொண்டவர்கள் வரலாம் என்ற அரசின் அனுமதிக்கு அந்நாட்டில் பணிபுரிந்து வரும் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |