ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த பொய்யான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது .
சுவிட்சர்லாந்து மாகாணத்தில் உள்ள Solothurn பகுதியில் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் உடனடியாக போலீசார் அந்த ரயிலை நிறுத்தி அதிலிருந்த பயணிகள் அனைவரையும் வெளியேற்றினர். அதன் பிறகு ரயில் முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.
இந்த பொய்யான தகவலால் பல ரயில்கள் தாமதமாகவும் , சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாலும் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் 49 வயது நபர் ஒருவரை கைது செய்துஉள்ளனர் .