ஸ்பெயினில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் புதிய வைரஸ் ஒமிக்ரான் அச்சம் ஒருபக்கம் இருந்தாலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களானது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக மாலகா, பார்சிலோனா, மேட்ரிக் உள்ளிட்ட பகுதிகளில் 1 கோடியே 10 லட்சம் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் சாலைகளை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருகின்றனர். கடந்த 2 வருடங்களாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஊரடங்கால் தடை செய்யப்பட்ட நிலையில் நடப்பாண்டில் மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.