Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

எண்ணிலடங்கா மாம்பூவின் மருத்துவ குணங்கள் அறிவோம்..!!!

மாம்பழத்தில் மட்டுமின்றி மாம்பூவிலும் எண்ணற்ற மருத்துவ நன்மைகள் இருக்கிறது அவற்றை பற்றி காணலாம்.

முக்கனிகளில் பெரிதும் பங்குவகிக்கும் மாம்பழத்தில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும் அதிகளவில் கொண்டுள்ளது. மாம்பழம் மட்டுமின்றி அவற்றில் மாம்பூக்களும் பலன்களை உள்ளடக்கியுள்ளது. இவை பற்களுக்கும், ஈறுகளுக்கும் பலம் அளிக்கும். வாய் புண்களை எளிதில் குணமாக்கி விடும். மிகவும் சிறந்த ஒரு மருந்து பொருள் என்றே கூறலாம்.

தொண்டை புண்:

சில பேருக்கு தொண்டை புண் ஏற்பட்டு எந்த உணவுகளையும் சாப்பிட முடியாமல் இருப்பார்கள். அவர்கள் மாம்பூக்களை பறித்து வந்து நன்கு தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதை நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அந்த நீரை வடிகட்டி, அதில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை பிழிந்து விட்டு, தொண்டைக்குள் இறங்குமாறு நன்றாக கொப்பளியுங்கள். தொண்டை புண் விரைவில் குணமாகிவிடும்.

கொசு தொல்லை மற்றும் வயிற்று புண்:

உலர்ந்திருக்கும் மாம்பூக்களை எடுத்து நெருப்பில் போட்டு அதிலிருந்து வரும் புகையை வீடு முழுக்க பரவ செய்தால் வீட்டில் தொல்லையாக இருக்கும் கொசுக்கள் அத்தனையும் ஒழிந்து விடும். உலர்ந்த மாம்பூக்களை நன்றாக பொடி செய்து மோரில் கலந்து பருகவேண்டும். தினமும் மூன்று வேளை பருகிவர வாய்ப்புண், வயிற்றுப்புண் காணாமல் போய்விடும்.

வயிற்று போக்கு மற்றும் மூல நோய்:

மாம்பூ, சீரகம், இவை இரண்டையும் சம அளவாக எடுத்து தனி தனியாக உலர்த்திப் பொடியாக்கி சலித்து எடுத்து இவைகளை ஒன்றாக கலந்து வைத்து கொள்ளுங்கள். இந்த பொடியை எடுத்து அதில் சிறிதளவு நாட்டு சர்க்கரை சேர்த்து, காலை, மாலை என தினமும் சாப்பிட்டால் விரைவில் மூல நோய் குணமாகி விடும். அடிக்கும் வெயிலுக்கு உடலில் சூடு பிரச்சனை அதிகமாகவே உண்டாகும். அச்சமயத்தில் வயிற்று போக்கு ஏற்படும். அந்த நேரத்திலும்  இந்த மருந்தை எடுத்து கொள்ளலாம்.

நீரிழிவு நோய்:

மாம்பூ முக்கியமாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. இதை தொடர்ந்து பல நாட்கள் பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மாம்பூ, நாவல் பழக்கொட்டை, மாந்தளிர் இம்மூன்றையும்  சம அளவாக சேகரித்து வெயிலில் உலர வைத்து இடித்து, தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு வெண்ணீரில் சேர்த்து குடித்து வாருங்கள்.

சீதபேதி:

மாம்பூ, மாதுளம் பூ மாந்தளிர் வகைக்கு 5 கிராம் சேகரித்து நீர் விட்டு மைப்போல் அரைத்து எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அதை சிறிது பசும்பாலில் சேர்த்து கலந்து காலை, மாலை என 2 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி நீங்கும்.

 

Categories

Tech |