தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவர் நண்பர்கள் என்று சொல்லப்பட்டாலும் ரசிகர்கள் இவர்களை போட்டி நடிகர்களாகவே பார்க்கிறார்கள். இவரின் திரை பயணமும் ஒன்றாகவே அமைந்தது மட்டுமில்லாமல் இருவரும் சரிசமமான ரசிகர்களை கொண்டு உள்ளனர். இவர்கள் பல வருடங்கள் கழித்து நேருக்கு நேர் மோத உள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜில்லா மற்றும் வீராம் படங்கள் ஒரே நேரத்தில் வெளியானது. அதன் பிறகு தற்போது விஜயின் வாரிசு திரைப்படம், அஜித்தின் துணை திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஒன்றாக வெளியாக உள்ளது. எனவே யார் படம் அதிக வசூல் வசூலிக்கும் என்று இவர்களின் ரசிகர்கள் தற்போதை மோதலை துவங்கி உள்ளனர்.
இந்நிலையில் அஜித்தின் துணிவு படத்தை விட வாரிசு தான் அதிக வசூலை வசூலிக்கும் என்றும் அஜித்தால் விஜயை நெருங்க முடியாது என்று பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் கூறியது, ஜில்லா மற்றும் வீரம் திரைப்படங்கள் வெளியான போது இருவரும் விஜய் அதிக கமர்சியல் படங்களை கொடுத்து வசூல் சாதனை நடத்தி வருகிறார். கடைசியாக வெளியான இவர்கள் படங்களை எடுத்துப் பார்த்தால் வலிமை படத்தை விட பல மடங்கு பிஸ்ட் திரைப்படம் வசூல் செய்துள்ளது. அயல்நாட்டில் கூட வாரிசு படம் தான் அதிக தொகைக்கு வியாபாரம் ஆகி உள்ளது. மேலும் துணிவு திரைப்படத்தின் வியாபாரம் மந்தமான நிலையில் தான் உள்ளது. எனவே விஜயின் வாரிசு படம் தான் அஜித்தின் துணிவை விட அதிக வசூலை ஈட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.