“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் “தேவராலன் ஆட்டம்” என்ற பாடலை யோகி சேகர் பாடியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி பாடகரான யோகி சேகர், சமீபமாக திரைக்கு வெளி வந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் “தேவராலன் ஆட்டம்” என்ற பாடலை பாடியுள்ளார். இவர் தற்போது சினிமா நேயர்களுக்காக பிரத்தியேகமாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதில் அவர் கூறியதாவது, ” தனது ஆரம்பகட்ட சினிமா பயணங்கள் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
தனது குரலில் ஏராளமான பாடல்கள் திரைக்கு வந்துள்ளது. அதாவது விஜய் ஆண்டனி இசையில் வெளியான “நான்” படத்தில் மங்காயலா, “96” படத்தில் காதலே காதலே, “தி லெஜன்ட்” படத்தில் மொசலு மொசலு, “பீஸ்ட்” படத்தில் திரை தீப்பிடிக்கும், “கர்ணன்” படத்தில் கண்டா வர சொல்லுங்க, “கேஜிஎஃப்” படத்தில் தீரா திரா மற்றும் “பரியேறும் பெருமாள்” படத்தில் பொட்ட காட்டில் பூவாசம் போன்ற பாடல்கள் பாடியுள்ளதாக” அவர் கூறியுள்ளார்.