Categories
சினிமா தமிழ் சினிமா

“ப்ப்ப்பா”….. என்னம்மா தோசை சுடுறாரு….. ஒரு தோசை பார்சல் ப்ளீஸ்….. ஐஸ்வர்யா ராஜேஷை ஜாலியாக கலாய்க்கும் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். அதன்பிறகு தான் நடித்த பல திரைப் படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். இவர் தற்போது டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி, மோகன்தாஸ், தீயவர் குலை நடுங்க, தி கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இதை பார்த்த ரசிகர்கள் பலரும் எனக்கு ஒரு தோசை பார்சல் என்று ஐஸ்வர்யா ராஜேஷை ஜாலியாக கலாய்த்து வருகிறார்கள்.

Categories

Tech |