Categories
உலக செய்திகள்

எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து… பெரும் பரபரப்பு…!!!

இந்தோனேசியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் ஜாவா மாகாணத்தில் பெர்டாமினாவின் பகுதியில் பலோங்கன் என்ற எண்ணெய்  சுத்திகரிப்பு ஆலை ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆலையில் ஆயிரக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர். அதனைப் போல் நேற்று வழக்கம்போல் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீரென தீ பிடித்துள்ளது.

அதனால்அந்த பகுதியைச் சுற்றிலும் விண்ணைத்தொடும் அளவிற்கு நெருப்பும் கரும் புகையும் வெளியாகியுள்ளன. அதனால் ஆலையில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கானோரை வெளியேற்றி உள்ளனர். இந்த தீ  விபத்தில் சிக்கி5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையில் ஆலைக்கு அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் மக்கள்912பேரை வெளியேற்றி உள்ளனர். இந்த விபத்தில் சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பல பேரை காணவில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |