Categories
தேசிய செய்திகள்

“என்னை பார்த்து இப்படி சொல்வதை ஒத்துக்கொள்ள மாட்டேன்”…. தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி ஸ்பீச்….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வெள்ளிமலை இந்து தர்ம வித்யா பீடம் சார்பாக நடந்த 33வது வித்யா ஜோதி பட்டமளிப்பு மற்றும் 42வது சமய வகுப்பு மாணவர் மாநாட்டில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “நாங்கள் இந்தியை திணிக்கவில்லை.

இந்திக்கு ஆதரவாக பேசினால் உடனடியாக என்னை பார்த்து ஹிந்தி இசை என்று சொல்வதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் திமுக-வினருக்கு எவ்வளவு தாய் மொழி பற்று இருக்கிறதோ அதே தமிழ் மொழி பற்று எனக்கும் இருக்கிறது. தமிழில் புதுப்புது முயற்சிகளை செய்து நீங்கள் உண்மையிலேயே தமிழுக்கு தொண்டாற்றுகிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துங்கள் என்று அவர் பேசியுள்ளார்.

Categories

Tech |