Categories
உலக செய்திகள்

கிட்டத்தட்ட 3 வாரங்கள்…. வெளியேறும் எண்ணெய் கசிவு…. திணறி வரும் அரசாங்கம்….!!

நைஜீரியாவில் கிட்டத்தட்ட 3 வாரங்களாக எண்ணெய்க் கசிவு ஏற்படுவதால் அப்பகுதியிலுள்ள விளைநிலம் உட்பட அனைத்தும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் பாயல்ஷா என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனையடுத்து நைஜீரியாவிலுள்ள பெட்ரோலிய கிணற்றின் குழாய் உடைந்துள்ளது. ஆகையினால் கிட்டத்தட்ட 3 வாரங்களாக அதிகளவு எண்ணெய் கசிவு வெளியேறி பாயல்சா பகுதியிலுள்ள விளைநிலம் உட்பட அனைத்து பகுதிகளும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நைஜீரிய அரசாங்கம் பெட்ரோலிய கிணற்றின் குழாய் உடைந்து வெளியேறும் எண்ணெய்க் கசிவை கட்டுப்படுத்த முடியாமல் மிகவும் திணறி வருகிறது. இது குறித்து எண்ணெய் கசிவு ஏற்படும் கிணற்றின் உரிமையாளர் கூறியதாவது, மர்ம கும்பல் சட்டத்திற்குப் புறம்பாக எண்ணெயை கொள்ளையடிக்க முயற்சி செய்தாலேயே மேல் குறிப்பிட்டுள்ள சம்பவம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |