Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்னால மறக்க முடியல… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

தந்தையின் இழப்பை தாங்க முடியாமல் கட்டிட மேஸ்திரியான வாலிபர்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள நரசோதிப்பட்டி பகுதியில் மணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு கட்டிட மேஸ்திரியான சபரிநாதன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மணி இறந்துவிட்டார். இதனால் சபரிநாதன் தனது தந்தையின் இழப்பை தாங்க முடியாமல் மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் சபரிநாதன் மது குடித்து விட்டு வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து சபரிநாதன் விடிந்து நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அருகிலிருந்தவர்கள் அவரின் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர். ஆனால் அங்கு சபரிநாதன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து  உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சபரிநாதனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |