Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்னால் தாங்க முடியல… மூதாட்டி எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

முதுகுத்தண்டு வலியினால் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் பகுதியில் பெரிய தம்பி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 75 வயதுடைய சீனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு பன்னீர்செல்வம் என்ற மகன் இருக்கின்றார். கடந்த சில மாதங்களாகவே சீனியம்மாள் முதுகுத்தண்டு வலியினால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் சீனியம்மாள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் வலி குறையாத காரணத்தினால் மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சீனியம்மாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய அவரது மகனான பன்னீர்செல்வம் தனது தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீனியம்மாளின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |