இராஜராஜ சோழனின் சதய விழா நடைபெற்றுள்ளது.
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் இராஜராஜசோழன் கதாபாத்திரத்தில் அருள்மொழிவர்மனாக நடித்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி. இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாடப்பட்டு வருகின்றன.
இது குறித்து நடிகர் ஜெயம் ரவி தனது கருத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில் அவர் கூறியதாவது, ” இராஜராஜ சோழனின் சதய விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அவரது புகழையும், பெருமையும் போற்றி அடுத்த தலைமுறைக்கு பகிர்ந்து கொள்வோம். நான் “பொன்னியின் செல்வனாக” திரையில் உம்மைப் போன்று பிரதிபலிக்க நான் என்ன தவம் செய்தேனோ” என்று அவர் பதிவிட்டுள்ளார்.