பிரிட்டன் நாட்டின் மன்னர் மூன்றாம் சார்லஸின் பயணப் பழக்கத்தை சமீபத்தில் எழுத்தாளர் கிறிஸ்டோபர் ஆண்டர்சன் வெளிப்படுத்தியுள்ளார்.
பிரிட்டன் நாட்டின் மன்னர் மூன்றாம் சார்லஸ் இதுவரை கிரேட் பிரிட்டன் கண்டிராத விசித்திரமான மன்னர்களில் ஒருவராவார். இது குறித்து எழுத்தாளர் கிறிஸ்டோபர் ஆண்டர்சன் கூறியதாவது, மன்னர் மூன்றாம் சார்லஸ் இன்னும் தனது குழந்தை பருவத்தில் இருக்கும் போது பயன்படுத்திய டெடி பியர் பொம்மையுடன் பயணம் செய்வதாக கூறியுள்ளார். அவர் மிக சிறிய குழந்தையாக இருந்த போது அந்த கரடி பொம்மையுடன் தான் விளையாடுவாராம். அந்த பொம்மையை தொடுவதற்கு மன்னர் சார்லஸ் யாரையும் அனுமதிக்க மாட்டார்.
அந்தக் கரடி பொம்மையை தொடுவதற்கு மன்னர் சார்லசால் அனுமதிக்கப்பட்ட ஒரே ஒரு நபர் அவரது குழந்தை nanny மாபெல் ஆண்டர்சன் மட்டும் தான். அதுமட்டுமின்றி, மன்னர் சார்லஸ் “தனிப்பயனாக்கப்பட்ட கழிப்பறை இருக்கை” மற்றும் காகிதத்துடன் தான் பயணம் மேற்கொள்வார். அதேபோல், அவர்கள் எங்கு சென்றாலும் மன்னருக்கு ஐஸ் க்யூப் தட்டுகளை தங்களுடன் எடுத்துச் செல்வார்கள், ஏனெனில் square cubes ஐஸ் எழுப்பும் ஒலியை அவர்கள் விரும்பவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.