Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? 8 பேரின் வெறிச்செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

பட்டதாரி வாலிபர் மற்றும் அவருடைய நண்பர் ஆகிய இருவரையும் வழிமறித்து வெட்டிய 8 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் மகாவீர் நகரில் செந்தில் மகன் யோகேஸ்வரன் வசித்து வருகின்றார். இவர் பி.காம். பட்டதாரி ஆவார். இவரும் இவரது நண்பரான டாக்டர் மூர்த்தி ரோடு பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவரும் வெளியில் சென்றுவிட்டு மகாவீர் நகரிலுள்ள யோகேஸ்வரன் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்னால் தொடர்ந்து வந்த 8 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் யோகேஸ்வரன் மற்றும் நந்தகுமாரை வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த 2 பேரும் அங்கிருந்து தப்பிசெல்ல முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் யோகேஸ்வரனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதனை தடுப்பதற்காக வந்த நந்தகுமாரை அந்த கும்பல் அரிவாளால் வெட்டினர். இதனையடுத்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இந்நிலையில் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவர்கள்  2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இவர்களில் யோகேஸ்வரன் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |