மாணவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கனூர் பகுதியில் சுந்தர்ராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு முத்து கதிரேசன் என்ற மகன் இருக்கின்றார். இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் பண்ணிராட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இதனையடுத்து அந்த மாணவியிடம் முத்து குமரேசன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி சென்று தொந்தரவு செய்து உள்ளார். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அந்த மாணவி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் முத்து கதிரேசனை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.