Categories
கிரிக்கெட் விளையாட்டு

“என்மேல ரொம்பவே நம்பிக்கை வைச்சாரு” …. எல்லாமே அவராலதான் … தீபக் சாகர் பேட்டி ….!!!

என்னுடைய பேட்டிங் மீது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார் என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான  தீபக் சாகர்  கூறியுள்ளார் .

இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற பேட் செய்த இலங்கை அணி 275 ரன்களை எடுத்தது. இதன்பிறகு களம் இறங்கிய இந்திய அணி 276 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. ஆனால் 193 ரன்களுக்குள் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது .இந்த இக்கட்டான சூழலில் இறுதியாக களமிறங்கிய தீபக் சாகர்-புவனேஸ்வர் குமார் ஜோடி  அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றது. இதில் தீபக் சாகர் 82 பந்துகளில் 7 பவுண்டரிகள் , ஒரு சிக்சர் அடித்து விளாசி 69 ரன்களை குவித்தார். இறுதியாக இந்திய அணி 49.1 ஓவர்களில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

இதுகுறித்து உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 28 வயதான தீபக் சாகர் கூறும்போது, “இதுபோன்ற ஒரு இன்னிங்சில்  விளையாட வேண்டும் என்பது என்னுடைய சிறுவயது கனவாகும். இதைவிட சிறப்பாக விளையாடி வெற்றியை தேடித்தர முடியாது என நினைக்கிறேன். போட்டியில் களமிறங்கும்  முன்பாக அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்னிடம் எல்லா பந்துகளையும் விளையாட வேண்டும்  என்று கூறினார். இவருடைய பயிற்சியின் கீழ் இந்திய ‘ஏ ‘அணியில் சில போட்டிகளில் பேட்டிங் செய்துள்ளேன். அவர் என்னுடைய திறமை மீது நம்பிக்கை வைத்திருந்தார் . பேட்டிங்கில் 7 -வது வரிசை வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாகூடிய அளவுக்கு இருப்பேன்  என்று என்னிடம் கூறினார்..இந்த ஆட்டத்தில் ரன் தேவைக்கான இலக்கு 50-க்கு குறைவாக இருந்தபோது எனக்கு நம்பிக்கை பிறந்தது. இதில் சில ஷாட்களை  ரிஸ்க் எடுத்து விளையாடினேன்” என்று  அவர் கூறினார்.

Categories

Tech |