Categories
கிரிக்கெட் விளையாட்டு

எஞ்சிய ஐபிஎல் போட்டியில்….’பேட் கம்மின்ஸ் பங்கேற்க மாட்டார்’…! வெளியான தகவல் …!!!

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டால் ,பேட் கம்மின்ஸ் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

2021 ம் ஆண்டு சீசனுக்கான ஐபிஎல் போட்டி ,இந்தியாவில் கடந்த மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் மே 3ஆம் தேதி , கொல்கத்தா அணி வீரர்களுக்கு முதலில் கொரோனா  பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு டெல்லி ,ஹைதராபாத் அணி வீரர்களுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பிசிசிஐ நடத்திய சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்ற பேட் கம்மின்ஸ், மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. டேவிட் வார்னர் மற்றும் பேட் கம்மின்ஸ் இருவருக்கும் வெஸ்ட் இண்டீஸ், தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதோடு பேட் கம்மின்ஸ்  நீண்ட நாட்களாக கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில், இருந்து விளையாடி உள்ளார். இதனால் எஞ்சிய ஐபிஎல் போட்டியில் ,பேட் கம்மின்ஸ் திரும்பாததற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

Categories

Tech |