Categories
சினிமா தமிழ் சினிமா

இனி வருடத்துக்கு ஒரு படம் நடிப்பேன் – காமெடி கதாநாயகன் யோகிபாபு

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக நடிக்கும் யோகிபாபு, இனி வருடத்துக்கு ஒரு படம் நடிப்பேன் என உறுதியோடு கூறியுள்ளார்.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக உயர்ந்துள்ளர் யோகிபாபு. இவர் பிரபல நடிகர்கள் ரஜினி , விஜய் மற்றும் அஜித் என அனைத்து படங்களிலும் நடித்துள்ளார். கடந்த வருடம் மட்டும் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததுள்ளார். இப்பொழுது யோகிபாபு கைவசமாக பதினாரு படங்கள் வைத்திருக்கிறார்.

இதுமட்டுமல்லாமல் பன்னி குட்டி மற்றும் மண்டேலா ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.யோகிபாபுவின் ஒரு நாள் சம்பளமம் மட்டும் ரூபாய் ஐந்து லட்சம் வாங்குவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவர் பேட்டியில் நான் திரையுலகுக்கு அறிமுகமாகி காமெடி நடிகராக பிரபலமானதும் தொடர்ந்து இரவு மற்றும் பகல் என பார்க்காமல் வேலை பார்த்தேன். அதனால் என் தூக்கம் போய்விட்டது மற்றும் உடல் நலம் பாதிப்புக்கு உள்ளாகியது. ஆனால் இப்பொழுது இரவு மற்றும் பகல் நேரங்களில் நடிப்பதில்லை என்று யோகிபாபு கூறினார்.

மேலும் யோகிபாபு அவர்கள் நான் கதாநாயகனாக அல்ல, கதையின் நாயகனாக வருடத்துக்கு ஒரு படம் நடிப்பேன் என உறுதியோடு தெரிவித்தார். மேலும் அவர் நான் மற்ற படங்களுக்கு காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |