வனவிலங்குகளின் தாகத்தைத் தீர்ப்பதற்காக சூரியசக்தி மின்சாரத்துடன் ஆழ்துளை கிணறுகள் மற்றும் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் கொண்ட குடியாத்தம் வனப்பகுதியில் யானைகள், சிறுத்தைகள், கரடிகள், மான்கள், செந்நாய்கள், காட்டுப்பன்றிகள் என பெரும்பான்மையான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இந்த வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அடிக்கடி வனப்பகுதி அருகில் உள்ள கிராம பகுதிக்குள் நுழைவதால் நாய்கள் விரட்டி பெரும்பான்மையான மான்கள் இறந்த சம்பவங்கள் நடந்திருக்கின்றது. அதேபோன்று உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த சிறுத்தைகள் கால்நடைகள் தாக்கியதில் அது இறந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. குடியாத்தம் வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைப்பதற்கு முக்கிய ஆதாரமான தண்ணீர் தேவை என்பதனால் ஆழ்துளை கிணறு அமைத்து, அதற்கு சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை பயன்படுத்த வனத்துறையினர் முடிவு செய்தனர்.
அதன்படி 11- வது நிதிக்குழு நிதியுதவியுடன் சுமார் 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அனுப்பு பகுதியிலிருந்து துருகம் செல்லும் பாதையில் தலா 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 தரைத்தள குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. அதேபோன்று ஆழ்துளை கிணறுகள் அமைத்து சூரிய சக்தி மூலம் மின் இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த இரண்டு 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் குடிநீர் நிரப்பப்பட்டதனால் இப்பகுதியில் இருக்கும் வனவிலங்குகள் குடிநீர் தேடி கிராம பகுதிக்கு செல்லும் நிலை ஏற்படாது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.