தமிழகத்தில் இந்திய ரயில்வே துறையில் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்குவதில் பல திட்டங்களையும் நிறைவேற்றி வருகின்றன. அதன்படி விரைவு ரயிலில் பயணிகள் பயணிக்க இருக்கை வசதி ,படுக்கை வசதி மற்றும் ஏசி பெட்டிகள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஏசி பெட்டிகளில் கட்டணத் தொகை அதிகம் இருப்பதால் நடுத்தர மக்கள் பயணிக்க முடிவதில்லை. இதனால் இந்திய ரயில்வே 02403 என்ற பெட்டி புதிதாக தொடங்கப்பட்டு பிரயாக்ராஜ்- ஜெய்ப்பூர் விரைவு ரயில் இயக்கப்பட்டு உள்ளது. இதில் பயணம் செய்வதற்கு செய்வதற்காக 3 ஏசி எகனாமி கட்டணத்தைவிட 8% குறைவான கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி ரயில் பெட்டி, மடக்க கூடிய டேபிள்கள், செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, தீயணைப்பு சாதனம, சிசிடிவி கேமரா மற்றும் பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கும் ஒலிபெருக்கி ஆகிய வசதிகள் இடம் பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து மற்ற ரயில் பெட்டிகளிலும் இந்த திட்டத்தை கொண்டுவர இந்திய ரயில்வே ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது, இந்திய ரயில்வேயின் 3 ஏசி எகானமி இந்தத் திட்டத்தை தெற்கு ரயில்வே வரவேற்கிறது. இத்திட்டத்தில் தெற்கு ரயில்வே முதல் கட்டமாக 17 பெட்டிகள் ஒதுக்கப்பட்டு சென்னை ஐசிஎப் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பெட்டிகள் தயாரானவுடன் பாண்டியன் ராக்போர்ட் கன்னியாகுமரி நெல்லை மும்பை மற்றும் புதுடெல்லி ஆகிய வழித்தடங்களில் விரைவு ரயில்கள் இயக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.