புது வருடத்தில் புதிய விதிகள் நடைமுறைக்கு வரும். அதாவது, வங்கிச் செயல்முறைகள், பொருளாதாரம், தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் ஏற்படும். இந்த புது விதிகளில் கூகுள் உள்பட பல்வேறு தொழில்நுட்ப (டெக் ஃப்ரெண்ட்லி சர்வீசஸ்) சேவைகள் இருக்கிறது. அந்த வகையில் கூகுள் குரோம் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது.
அந்த வகையில் Windows-7 மற்றும் Windows-8.lக்கு குரோம் பதிப்பின் ஆதரவை நிறுத்த கூகுள் முடிவுசெய்துள்ளது. அதன்படி Windows-7 மற்றும் 8.1 பதிப்புகளை மடிக்கணினியில் வைத்திருப்பவர்கள் கூகுள் குரோம் பயன்படுத்த இயலாது. இதன் காரணமாக பழைய லேப்டாப்களை பயன்படுத்துபவர்களுக்கு அதிக பிரச்சனைகள் வரக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது..