இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று இங்கிலாந்தில் உள்ள நார்த்தம்ப்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இறுதியாக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 177 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக நடாலி சீவர் 55 ரன்கள், ஆலன் ஜோன்ஸ் 43 ரன்கள் எடுத்திருந்தனர். இந்தியா தரப்பில் இருந்து ஷிகா பாண்டே 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதன்பிறகு களமிறங்கிய இந்திய அணி 178 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷபாலி வர்மா முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளிக்க, ஸ்மிருதி மந்தனா 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஒரு ரன்னில் அவுட் ஆனார். இதனால் 8.4 ஓவரிலேயே 3 விக்கெட் இழந்து 54 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் தடைபட்டது . இதனால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது .