Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENGW VS INDW : மிதாலி ராஜ் அதிரடி ஆட்டம் …. 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி ….!!!

இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 3-வது  ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் முதல் 2 ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. ஆனால் ஆட்டத்தில்  மழை காரணமாக 47 ஓவராக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்வதால் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கில்  களமிறங்கியது. இறுதியாக 47 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 219 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.இதில்  அதிகபட்சமாக நடாலிசீவர் 49 ரன்களும் , கேப்டன் ஹீதர் நைட் 46 ரன்களும் மற்றும் வின்பீல்டு ஹில் 36 ரன்களும் எடுத்திருந்தனர்.

இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றவர்கள் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்பிறகு களமிறங்கிய இந்திய அணி 220 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மா – ஸ்மிருதி மந்தனா ஜோடி களமிறங்கியது. இதில்  ஷபாலி வர்மா 29 ரன்களில் வெளியேற மந்தனா 49 ரன்களில் ஆட்டமிழந்து அரை சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதன்பின்  களமிறங்கிய கேப்டன் மிதாலி ராஜ் நிதானமாக ஆடி இறுதி வரை அவுட் ஆகாமல்  75 ரன்கள் குவித்து அரைசதம் கடந்தார். இறுதியாக இந்திய அணி 46.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது. இதில் ஆட்ட   நாயகனுக்கான விருது இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜுக்கு  வழங்கப்பட்டது. இதன் மூலம் 3 ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Categories

Tech |