Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENGW VS INDW : 3-வது டி20 போட்டி …. இந்தியாவை வீழ்த்தி ….தொடரை வென்ற இங்கிலாந்து …!!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த  3-வது டி-20 போட்டியில் இங்கிலாந்து  அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது .

இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான 3 -வது டி20 போட்டி  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இறுதியாக 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு  153 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக  ஸ்மிரிதி மந்தனா 71 ரன்கள் எடுத்திருந்தார். இதன் பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி 154 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது.

இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டாமி பியுமாண்ட் 11 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நடாலி சிவர் – டானியல் வயாட் ஜோடி சேர்ந்தனர் .இதில் அதிரடி  ஆட்டத்தை காட்டிய  டானியல் வயாட் 12 பவுண்டரிகள் ,ஒரு சிக்சர் அடித்து விளாசி 89 ரன்களை குவித்தார். இறுதியில் 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் குவித்து  வெற்றி பெற்றது. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 1-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Categories

Tech |