Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில்…. இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றிபெறும்….! அடிச்சு சொல்லும் ராகுல் டிராவிட்…!!!

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடக்கும் ,டெஸ்ட் போட்டியில் இந்திய அணி    3-2 என்ற கணக்கில் நிச்சயம் வெற்றிபெறும் ,என்று முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி, அடுத்த மாதம் ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை இங்கிலாந்தில் சவுத்தம்டன்  நகரில், நியூசிலாந்துடன் மோதுகின்றது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்திற்கு  எதிரான 5 போட்டிகள் கொண்ட, டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி பங்கேற்கிறது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான, டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் மாதம் 4 ம் தேதி தொடங்க உள்ளது. இதனால் இந்திய அணி அடுத்த மாதம் ,2 ம் தேதி இங்கிலாந்திற்கு செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு , இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் தலைமையிலான  இந்திய அணி, இங்கிலாந்தில்  டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

அதன்பிறகு நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது. இதுபற்றி இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் நேற்று  பேட்டியில் கூறும்போது, இங்கிலாந்து அணி குறிப்பாக பந்துவீச்சில்,அதுவும்  வேகப்பந்து வீச்சில் மிகவும் திறமைவாய்ந்ததாக  காணப்படுகிறது. அதேபோல் இங்கிலாந்து அணி வீரர்களும் திறமை வாய்ந்தவர்களாக திகழ்கின்றனர். அந்த  அணியில் டாப் 6-7  பேட்ஸ்மேன்களில்,உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக  ஜோ ரூட் திகழ்கிறார். அதுபோல சிறந்த ஆல்ரவுண்டராக,                        பென் ஸ்டோக்ஸ் விளங்குகிறார்.

எனவே இவர்களுக்கு எதிராக இந்திய அணியில், சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சிறப்பாக செயல்படுவார் என்று தோன்றுகிறது. எனவே இந்தப் போட்டி மிகவும் எதிர்பார்ப்புடனும் சுவாரசியமாகவும் இருக்கும். ஆஸ்திரேலியாவில்  நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றதால், இந்தப் போட்டியிலும் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் இந்த போட்டியில் இந்திய அணி, நிச்சயம் 3-2 என்ற கணக்கில், வெற்றியை கைப்பற்றும் என்று கருதுகிறேன். இவ்வாறு இந்திய அணியின் முன்னாள் வீரரும், கேப்டனனுமான   ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார் .

Categories

Tech |