Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்திற்கு சென்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகள்… ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர்…!!!

இங்கிலாந்திற்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட்  வீரர், வீராங்கனைகள் அனைவரும் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், விராட் கோலி  தலைமையிலான இந்திய  அணி நியூசிலாந்துடன் மோதுகிறது. அதன்பின் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. அதுபோல மகளிர் கிரிக்கெட் அணியும் இங்கிலாந்தில் , வருகிற 16 ம் தேதி நடைபெறும் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து மகளிர் அணியுடன் மோதுகிறது. இந்நிலையில் கொரோனா  தொற்று காரணமாக தொடரில் பங்கு பெற்றுள்ள வீரர், வீராங்கனைகள் அனைவரும் இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்பாக மும்பையில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

தனிமைப்படுத்துதல் முடிவடைந்ததை அடுத்து ,அனைவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு மும்பையிலிருந்து , இங்கிலாந்திற்கு தனி விமானம் மூலமாக சென்றனர். லண்டன் சென்றடைந்த அனைவரையும் ,அங்கிருந்து சவுத்தம்டனுக்கு அழைத்துவரப்பட்டு ,அங்குள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதோடு தொடரில் பங்கு பெறும் வீரர் வீராங்கனைகள் அனைவரும் 10 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருப்பார்கள் என தெரிகிறது. தனிமைப்படுத்தல் முடிந்த பிறகு பயிற்சியை மேற்கொள்வார்கள்.

Categories

Tech |