Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்துக்கு…. 10-வது கொள்ளு பேரன் பிறந்துள்ளார்… பெரும் மகிழ்ச்சியில் குடும்பம்….!!

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் 10-வது கொள்ளுப்பேரன்  பிறந்துள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் 10-வது கொள்ளுப்பேரன் லூகாஸ் பிலிப் டின்டால் பிறந்துள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றது. இங்கிலாந்தின் ராணியான இரண்டாம் எலிசபெத்தின் மகள் வழி பேத்தி இளவரசியுமான  சாரா டின்டாலுக்கு  நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு லூகாஸ் பிலிப் டின்டால் என்ற பெயரினைச் சூட்டி மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்தக் குழந்தை இளவரசி சாரா டின்டால் இங்கிலாந்து ரக்பி வீரர் மைக்  தம்பதியின் 3-வது  குழந்தையாகும். இந்த ஆண் குழந்தைக்கு முன்பே இந்த தம்பதிகளுக்கு 7 வயதில் ஒரு மகனும், இரண்டு வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். இளவரசி சாரா டின்டால் அரைமணியில் குளியலறையில் குளித்துக்கொண்டு இருந்தபோதே  அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதாகவும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத காரணத்தால் குளியல் அறையிலேயே அவருக்கு குழந்தை பிறந்ததாகவும் மைக்  டின்டால் கூறுகின்றார். இங்கிலாந்தின் ராணியான இரண்டாம் எலிசபெத்தின் பத்தாவது கொள்ளுப்பேரனாக  லூகாஸ் பிலிப் டின்டால் பிறந்துள்ளார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |