Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு உடனே செஞ்சு தாங்க… பெண்களின் போராட்டம்… தென்காசியில் பரபரப்பு…!!

காலி குடங்களுடன் பெண்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள கட்டளை குடியிருப்பு பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 197 வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டதால் பொதுமக்கள் மீதமுள்ள வீடுகளுக்கு ஏன் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவில்லை என்று அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். அதற்கு அதிகாரிகள் இந்த ஆண்டில் 197 வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்புகள் வழங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் ஒன்றிணைந்து காலி குடங்களுடன் கற்குடி ஊராட்சி அலுவலகத்தின் முன்பு திடீரென போராட்டம் நடத்தியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறையினர்கள் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றது.

அதில் 197 வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும், மீதமுள்ள வீடுகளுக்கும் உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் எனவும்  கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம் என்று தெரிவித்து கோரிக்கை மனு ஒன்றை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுத்துள்ளனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

Categories

Tech |