Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு உடனே செஞ்சு தாங்க… பெண்களின் போராட்டம்… சேலத்தில் பரபரப்பு…!!

பெண்கள் இணைந்து காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள ஆர்.சி. செட்டிப்பட்டி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் இணைந்து காலி குடங்களுடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் திராசுதீன் மற்றும் காவல் துறையினர் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்போது அவர்கள் தங்களின் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும், அதற்காக சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டியபோது தங்கள் பகுதிக்கு வினியோகிக்கப்படும் கூட்டுக்குடிநீர் குழாயை உடைத்து விட்டனர். கடந்த சில மாதங்களாக நாங்கள் குடிநீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளோம். இதனால் அப்பகுதியில் வசிக்கும் சிலர் இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் எங்கள் பகுதியில் உடனடியாக உடைந்த குழாயை சரி செய்து குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் தங்களின் பகுதிக்கு தற்போது டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் என்றும், இன்னும் 2 நாட்களுக்குள் உடைந்த குழாயை சரி செய்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

Categories

Tech |