Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு உடனடியாக செஞ்சு தாங்க… தொழிலாளர்களின் போராட்டம்… தென்காசியில் பரபரப்பு…!!!

வட்டார சாலை போக்குவரத்து அலுவலகத்தின் முன்பு ஆட்டோ மற்றும் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் இணைந்து போராட்டத்தில்  ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள சங்க மாவட்ட செயலாளர் வன்னியபெருமாள் தலைமையில் சி.ஐ.டி.யு. சாலை போக்குவரத்து மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்கங்கள் இணைந்து திடீரென போராட்டம் நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் சி. ஐ. டி. யு. மாவட்ட செயலாளர் வேல்முருகன்,  மாரியப்பன், என பலரும் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தில் தொழிலாளர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் எனவும், வாகனங்களின் சான்றிதழ் மற்றும் இன்சூரன்ஸ் செலுத்த இன்னும் சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் ஓட்டுநர் உரிமம் எடுப்பதை தனியார் மயமாக்க கூடாது என்றும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் கொரோனா உதவித் தொகை 7,500 ரூபாயை அனைத்து பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தொழிலாளர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

Categories

Tech |