பொறியியல் படிப்பிற்கு தேவையான கலந்தாய்வு அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
தமிழகத்தில் மாணவர்களின் தேர்வு, மாணவர் சேர்க்கை போன்றவற்றில் பல குழப்பங்கள் ஏற்பட்டு வரும் சூழலில் இன்ஜினியர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை என்பது இந்த வருடம் கொரோனா பாதிப்பு காரணமாக, ஜெ.இ.இ, நீட் நுழைவு தேர்வுகளுக்கு முன்பே இன்ஜினியரிங் கலந்தாய்வு நடைபெறுகிறது என்றும், நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வரும் மாணவர்கள் தேசிய அளவிலான பொறியியல் கல்லூரிகளுக்கு சென்று விடும் சூழல் உள்ளதால், கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்ட இடங்கள் காலியிடங்களாகும் நிலை உருவாகி உள்ளது.
இதனால், காலியிடங்களை நிரப்புவது குறித்து உரிய வழிகாட்டுதல்களை கொடுக்க வேண்டுமென மனுதாரர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோரின் அமர்வில், ஒவ்வொரு வருடமும் மாணவர் விரும்பும் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பட்சத்தில் காலிப்பணியிடங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று என்றும், அவற்றை அரசு எவ்வாறு கையாள்கிறது என ஆர்.டி.ஐ. மூலம் மனுதாரர் அறிந்துகொள்ள வேண்டுமென அறிவுறுத்தி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.