இன்ஜினியரை தாக்கிய குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொம்மனம்பாளையம் பகுதியில் சிவில் இன்ஜினீயரான சித்தார்த் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு நண்பர்கள் 4 பேர் சென்றுள்ளனர். இந்நிலையில் மது குடித்துவிட்டு பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கு இடையூறு அளித்த நண்பர்களை சித்தார்த் கண்டித்துள்ளார். இதனால் 4 பேரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அதன்பின் மறுநாள் காலை மீண்டும் சித்தார்த்தை பார்க்க வந்த நண்பர்கள் எங்களை நீ எப்படி திட்டலாம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது கோபமடைந்த 4 பேரும் சித்தார்த்தை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த சித்தார்த்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஜித்குமார், விக்னேஷ், ஹரிஹரன், நீலவேந்தன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.