எரித்திரியா பகுதியில் இரண்டு திருமணம் செய்யாத ஆண்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள எரித்திரியாவில் வசித்து வரும் ஆண்கள் கட்டாயமாக இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அவ்வாறு 2 திருமணம் செய்ய மறுக்கும் ஆண்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இந்நிலையில் முதல் மனைவி அவரது கணவரின் 2-வது திருமணத்திற்கு ஏதாவது ஆட்சேபனை தெரிவித்தால் இருவரும் சிறைக்கு செல்ல வேண்டியது இருக்கும். இதற்கிடையில் எரித்திரியாவில் பலமுறை உள்நாட்டுப் போர்கள் நடைபெற்று வருவதால் ஆண்கள் அதிகமாக உயிரிழக்கின்றனர்.
இதனால் இங்கு ஆண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் நாட்டில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிட்டது. இதன் காரணமாக பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆண்கள் கட்டாயம் இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. எனினும் எரித்திரியன் அரசாங்கத்தின் இந்த முடிவு உலகம் முழுவதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.