பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் உட்பட முக்கிய வீரர்கள் களமிறங்குகின்றனர்.
இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பு இங்கிலாந்து அணி வீரர்கள் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. இதனால் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் உட்பட முக்கியமான வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.இதன் காரணமாக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான புதிய இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக களம் இறங்கியது.
ஆனால் புதிய அணியாக இருந்தாலும் பாகிஸ்தானை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. இந்நிலையில் மூன்று டி20 போட்டி வருகின்ற 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தப்போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் உள்ளிட்ட 9 வீரர்கள் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து டி20 அணி:
மோர்கன், மொயீன் அலி, பேர்ஸ்டோவ், டாம் பாண்டன், பட்லர், டாம் கர்ரன், லேவிஸ் கிரேகோரி,ஜேக் பால், கிறிஸ் ஜோர்டான், சகிப் மெஹ்மூத், தாவித் மலான், லியம் லிவிங்ஸ்டன், மேட் பார்கின்சன், அடில் ரஷித், ஜேசன் ராய், டேவிட் வில்லே.