Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS PAK : மலான்,ஜாக் கிராலி அசத்தல் …. 9 விக்கெட் வித்தியாசத்தில்…. இங்கிலாந்து அபார வெற்றி ….!!!

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான  முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி  முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஃபாகர் சமான் 47 ரன்கள் , சதாப் கான் 30 ரன்கள்  எடுத்திருந்தனர். இங்கிலாந்து சார்பில் சகிப் முகமது 4 விக்கெட்டும் ,  கிரேக் ஒவர்டான் , பார்க்கின்சன் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதன் பிறகு  களமிறங்கிய இங்கிலாந்து அணி 142 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட்- டேவிட் மலான் ஜோடி களமிறங்கினர்.இதில் பிலிப் சால்ட்  7 ரன்கள் எடுத்த போது  ,அப்ரிடி பந்து வீச்சால் ஆட்டமிழந்தார் . அடுத்ததாக களமிறங்கிய ஜாக் கிராலி , டேவிட் மலானுடன் ஜோடி சேர்ந்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர். இதில் 21.5 ஓவரிலேயே  142 ரன்களை எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது . இதில் டேவிட் மலான் 68 ரன்கள், ஜாக் கிராலி 58 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.

Categories

Tech |