Categories
அரசியல் தேசிய செய்திகள்

”இரவு 12 மணி ஆனாலும் விவாதத்தை முடியுங்கள் ” எடியூரப்பா கோரிக்கை …!!

இரவு 12 மணி ஆனாலும் இன்றே விவாதத்தை முடித்து விடுங்கள் என்று கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக மாநில அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் கர்நாடக  சட்டசபையில் ஆளும் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில்  பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று அம்மாநில கவர்னர் வஜூபாய் வாலா முதல்வர் குமாரசாமிக்கு 2 முறை கெடு விதித்தும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கவில்லை. இதனால் வருகின்ற 22-ஆம் தேதி ( திங்கட்கிழமை ) நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடரும் என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Image result for yeddyurappa

கர்நாடக மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் இரண்டாம் நாள் விவாதம் இன்று நடைபெற்றது.  நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீதான  முழு விவாதம்  நடைபெற்ற பிறகே வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று ஆளும் கட்சியினர் தெரிவித்தனர். இதற்க்கு எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா இரவு 12 மணி ஆனாலும் இன்றே விவாதத்தை முடித்து விடுங்கள் என்று வலியுறுத்தினார்.பின்னர் தீர்மானத்தின் மீது இன்னும் சில உறுப்பினர்கள் பேச வேண்டுமென்று சபாநாயகரிடம்  ஆளும் கூட்டணி கட்சியினரின் கோரிக்கையை ஏற்று  கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை காலை 11 மணிக்கு சபாநாயகர் ரமேஷ்குமார் ஒத்தி வைத்தார்.

Categories

Tech |