Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘எனக்கு டெஸ்ட் போட்டில’…’விளையாடுறதுக்கு ஆர்வம் இல்லையா’…! தவறான செய்திக்கு பதிலடி கொடுத்த புவனேஷ்வர் …!!!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், கடந்த 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு நடந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் (வயது 31). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டிற்கு பின் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், இந்திய அணியில் அவர் பங்கேற்கவில்லை. அவர் ஒருநாள் தொடர் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்துள்ளார். இந்த நிலையில்  புவனேஷ்வர் குமாருக்கு டெஸ்ட் போட்டியில், விளையாடுவதற்கு ஆர்வமில்லை என பத்திரிக்கை ஒன்றில் செய்திகள் வெளியானது.

இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள புவனேஷ்வர் குமார், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இந்திய அணிக்காக எப்போதும் மூன்று வடிவிலான போட்டியில்  தொடர்பில் விளையாடுவதற்கு என்னை தயார்படுத்திக் கொண்டு வருவதாகவும் கூறினார். எனவே உங்கள் யூகத்தின் அடிப்படையில் , தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |