Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘எனக்கு திரைப்படம் இயக்க விருப்பம் ‘… வலிமை பட தயாரிப்பாளர் பேட்டி…!!!

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படத்தை தயாரித்து வரும் போனி கபூர் விரைவில் இயக்குனராக உள்ளாராம் .

பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் போனி கபூர் தற்போது தென்னிந்திய மொழி திரைப்படங்களை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் . அந்த வகையில் தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தை தயாரித்து வருகிறார் .

 

விரைவில் இயக்குனராகும் வலிமை பட தயாரிப்பாளர்

இவர் அஜித் நடித்திருந்த நேர்கொண்டபார்வை படத்தையும் தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ‘இயக்குனராக விருப்பம்’ என கூறியுள்ளார் . அவர் அளித்துள்ள பேட்டியில் ‘எனக்கு திரைப்படம் இயக்க விருப்பம். நான் எனது 25 வயதில் இருந்து படங்கள் தயாரித்து வருகிறேன் . இது நான் படம் இயக்குவதற்கான நேரம் என நினைக்கிறேன் . விரைவில் அது நடக்கும் என நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார் .

Categories

Tech |