தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், இசை அமைப்பாளராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது வள்ளிமயில், மழை பிடிக்காத மனிதன், கொலை போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்து வரும் ரத்தம் என்ற திரைப்படத்தை சி.எஸ் அமுதன் இயக்குகிறார். இப்படத்தில் மகிமா நம்பியார், நந்திதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் அமுதன் தன்னுடைய வலைதள பக்கத்தில் நடிகை மகிமா நம்பியார் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதனுடன் ரத்தம் பட குழுவினர் மட்டும் கடினமான உழைப்பாளிகள் அல்ல. நடிகர்களும் சமமான அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். மகிமா நம்பியார் அவருடைய பணியை தீவிரமாக செய்துள்ளார் என்று கலாய்த்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவுக்கு நடிகர் விஜய் ஆண்டனி அவங்க கடினமான உழைப்பை பாக்கும் போது அப்படியே என்ன பாக்குற மாதிரியே இருக்கு என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் நடிகை மகிமா நம்பியார் விஜய் ஆண்டனியின் பதிவுக்கு பதில் அளித்துள்ளார். அதாவது என் மானம் போச்சு, மரியாதை போச்சு, என்னோட ஸ்டைல் போச்சு, நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க. கடவுளே இந்த பதிவுக்கு பிறகு நான் இந்தியாவுக்கு வர விரும்பவில்லை என்று ஜாலியாக பதிவிட்டுள்ளார். மேலும் பிரபலங்களின் டுவிட்டர் பதிவுகள் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.
அவங்க hardwork பன்றத பாக்கும் போது.
அப்புடியே என்ன பாக்குற மாறியே இருக்கு💪 https://t.co/NY2pVlPWoI— vijayantony (@vijayantony) October 7, 2022