Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“என் கொளுந்தியாளுடன் பேச கூடாது” வாலிபருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பூலத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக ஆனந்தன் இருக்கின்றார். இவருக்கு மணிமாறன் என்ற தம்பி இருந்தார். இதில் மணிமாறனுக்கு திருமணம் முடிந்து ரம்யா என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இவர்களில் ரம்யாவின் சகோதரி நிலக்கோட்டையில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த மாணவியை பூலத்தூரை சேர்ந்த காய்கறி வியாபாரி சுரேந்தர் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து மாணவியின் செல்போன் எண்ணிற்கு சுரேந்தர் அடிக்கடி குறுந்தகவல் அனுப்பி வந்துள்ளார்.

இதனால் மாணவி தனது மாமா மணிமாறனிடம் இதுகுறித்து தெரிவித்தார். இதனிடையில் பூலத்தூரில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும் ராமர்கோவில் திருவிழாவிற்கு சுரேந்தர் வந்துள்ளார். அப்போது அவரை பார்த்த மணிமாறன் எதற்காக தன் கொளுந்தியாளுக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்புகிறார் என்று கேட்டுள்ளார் .மேலும் இனிமேல் மாணவியுடன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று சுரேந்தருக்கு மணிமாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சுரேந்தர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிமாறனை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் மணிமாறன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிமாறனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சுரேந்தரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |