கொரோனா வைரஸ் பீதியில் ஆஸ்திரேலியாவில் ஆணுறை முழுவதும் விற்று தீர்ந்து விட்டது.
கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இதனால் ஒவ்வொரு நாடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பலநாடுகளில் மருந்துகள் , மாஸ்க்குகள் , பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் மாஸ்க்குகள் , டாய்லெட் பேப்பர்கள் , ஆணுறைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. கொரோனா வைரசுக்கு ஆணுறை தட்டுப்பாடு எதற்காக என்ற கேள்வி எழுந்து அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா பீதியில் அங்குள்ள மக்கள் தங்களை காத்துக் கொள்ள ஆணுறையை கூட விட்டு வைக்கவில்லை என்று தெரிகின்றது. இது குறித்து சிட்னியை சேர்ந்த Thanh Thai என்ற பெண் தனது பேஸ்புக்கில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு என்ன நடந்தது ? என்று யாராலும் கூற முடியுமா ? என்று கேள்வி கேட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் ஆணுறை வைக்கப்படும் ஷெல்ப் . அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில் இது இது முற்றிலும் காலியாக இருந்தது. இதற்க்கு பதில் அளித்த மற்றொரு பெண் , சமூக ஊடகத்தில் வெளியான செய்தி என்று குறிப்பிட்டு ஆணுறைகளை கைவிரல்களில் அணிந்துகொண்டாள் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதால் ஆணுறைகள் முழுவதும் விற்று தீர்ந்துவிட்டது என்று தெரிவித்தார்.