குஜராத் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக பேசினார். அவர் பேசியதாவது, பல்வேறு பணியிடங்களில் வேலையில் அமர்வதற்கான கடிதங்களை பெற்றுள்ள இளைஞர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். குஜராத் மாநிலம் தற்போது விரைவாக முன்னேறி வருகிறது. பஞ்சாயத்து சேவை வாரியத்தில் 5000 பேருக்கும், துணை ஆய்வாளர் மற்றும் லோக் ரஷக் நியமன வாரியத்தில் 8000 பேருக்கும் விரைவாக வேலை வாய்ப்புகளை வழங்கிய மாநில அரசுக்கும் முதல்வருக்கும் பாராட்டுகள்.
அண்மையில் 10000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதோடு இனி வருகிற காலத்தில் 35 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். ஓஜாஸ் டிஜிட்டல் தளங்கள் மற்றும் குரூப் 2, 3 தேர்வுக்கான நேர்முக தேர்வு போன்றவைகள் நீக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. இதேபோன்று வேலை வாய்ப்பு முகாம்கள் மாநிலம் மற்றும் தேசிய அளவில் இனி வரும் காலங்களில் நடத்தப்படும். மேலும் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்று கூறினார்.