Categories
உலக செய்திகள்

ஊரடங்கில் மக்கள் பணி செய்யும் ஸ்பைடர் மேன், பேட் மேன்!

போர்ச்சுக்கல் நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் ஸ்பைடர் மேன் போன்றும், பேட் மேன்  போன்று உடையணிந்து மக்களுக்கு பணி செய்து வருகின்றனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனாவை தடுக்க அனைத்து நாடுகளும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. மேலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றது.. அந்த வகையில், கொரோனாவை தடுக்க போர்ச்சுக்கல் நாடும் மார்ச் 18ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுதியுள்ளது.

இந்த நிலையில் லிஸ்பன் நகரின்  சான்டோ அன்டானியோ பரிஷ்  கவுன்சிலை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் ஸ்பைடர் மேன் போன்றும், பேட் மேன் போன்றும், சூப்பர் ஹீரோ போன்றும் உடைகளை அணிந்துகொண்டு துப்புரவு பணி, தோட்டவேலை உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.

மேலும் வீட்டில் உள்ள முதியவருக்கு உணவு மற்றும் இன்றியமையாப் பொருட்கள் ஆகியவற்றையும் கொண்டு சென்று கொடுத்து வருகின்றனர். போர்ச்சுக்கல் நாட்டில் இதுவரையில் 23 ஆயிரத்து 392 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 880 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |