டெக் ஜாம்பவான் சுந்தர் பிச்சை 2 டோஸ் தடுப்பூசிகளையும் முழுமையாக எடுத்துக் கொண்டவர்கள் மட்டும் தங்களது பணியை தொடங்குவதற்காக நிறுவன வளாகங்களுக்கு அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.
கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூகுள் பிளாக்கில் தங்களது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் பதிவிட்டுள்ளதாகவும் அக்டோபர் 18 வரை ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அந்த இமெயிலில் பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு 200-க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகளை உருவாக்கி வணிகங்கள் மற்றும் மக்களுக்கு இந்த கடினமான நேரத்தில் சென்று சேர உதவுகிறோம்.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து வீட்டிலிருந்து பணிபுரிய முடிவெடுக்கப்பட்டது. அந்நாளிலிருந்து கேரர்ஸ் லீவ் கவரேஜ் நமது ஊழியர்களுக்கு உதவும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் தங்களது உடல்நிலையை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். எனவே இரண்டாவது முறையாக அக்டோபர் 18-ஆம் தேதி வரை வீட்டிலிருந்து பணிபுரியும் கொள்கையை நீட்டிக்க உள்ளோம்.
கொரோனா கட்டுக்குள் வந்திருக்கிறதா என்பதை கண்காணித்த பிறகு அனைத்து ஊழியர்களும் 30 நாட்களுக்கு முன்னரே அலுவலகம் திரும்புவதற்கு தகவல் அளிக்கப்படும். அதில் 2 டோஸ் தடுப்பூசியையும் முழுமையாக போட்டு கொண்ட ஊழியர்களுக்கு மட்டுமே நிறுவன வளாகங்களில் அனுமதி வழங்கப்படும். மேலும் நமது ஊழியர்களை அலுவலகங்களில் காணும் அந்த நாளை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.